ஸ்டாகின் பூக்கள் செய்வது எப்படி என்று எனது வலைப்பூக்குக்கு வரும் பூக்களுக்கு நிச்சயம் தெரியும்.. நமக்கு கற்பனை திறன் இருந்தால் எண்ணவேண்டுமானாலும் இந்த துணியில் செய்யலாம் இந்த பூக்கூடை சில ஆண்டுகளுக்கு முன்பு நான் செய்தது..
தேவையான பொருட்கள் ரெடி செய்து வைத்த ஸ்டாகின் கலர் கலர் இதழ்கள், மற்றும் இலைகள் மற்றும் மின்னும் லைட் செட், க்ரீன் டேப்
கலர் கலர் ஸ்டாகின்ஸ் இதழ்களை லைட் டை சுற்றி ஓவ்வொரு இதழ்களாக வைத்து கட்டி விடவும்.
மூன்று பூக்களாக வைத்து ஒரு இலை வைத்து கட்டவும்
இப்படி நமக்கு விருப்பம் போல் பூக்களை கட்டிவிட்டு கீரீன் டேப் போட்டு ஓயர் தெரியாமல் ஓட்டி விடவும்
 |
| பூக்களை எல்லாம் ஒரு கூடையில் வைத்து ஸ்விச் போட்டால் கலர் கலர் மின்னும் பூ க் கூடை ரெடி.. |

வரலாற்று பெருமை மிக்க அழகான ஊர் பாரம்பரிய கட்டடங்கள, நினைவுச்சின்னங்கள் என்று வரலாற்றோடு பின்னிப் பிணைந்த இடம் தான் ஹைதராபாத்.

ஆந்திராவுக்கு சுற்றுலா வர விரும்புவோர் ஹைதராபத்தை பார்க்காமல் போகமுடியாது அதிலும் இங்குள்ள 400 ஆண்டு பழமை வாய்ந்த சார்மினார் கோபுரங்களை பார்க்காவிட்டால் அப்பயணம் முழுமை பெறாது. அதில் பொதிந்து கிடக்கும் புதையல்கள் ஏராளம்.

இது சார்மினரின் உட்பகுதி। அந்த காலத்தில் இங்கு அதிகமாக காலர நோய் வந்ததால் இந்த நாட்டு அரசர் 4மினார் வைத்து ஊர் நடுவில் கட்டடம் கட்டி இங்கு பிராத்தனை செய்ததாக சொல்லுறாங்க.
சார்மினார் அருகில் சில... ருசியான உணவு வகைகள் பல இங்கு கிடைக்கும் சாய்(டீ) பிரியாணி, ஹலிம் மிகவும் பிரபளம்

ladd bazzar
சார்மினார் கோபுரங்களை சுற்றி உள்ள பகுதிகளும் இதற்கு எவ்விதத்திலும் சளைத்தவை அல்ல. வண்ணமயமான கடைத்தெருக்களில் விதம் விதமான கண்ணாடி, முத்து வளையல்கள், வளையலுக்ககவே ஒரு தெரு உள்ளது,முத்துக்கள், முஸ்லிம்களின் பாரம்பரிய திருமண ஆடைகள், அழகுசாதன பொருட்கள், தங்க முலாம் பூசிய அலங்கார பொருட்கள், என்று இங்கு பல கடைகள் உள்ளது। மாலை பொழுதில் ஒளிவிளக்கில் அந்த நகரமே மின்னும்। நன்றாக பேரம் பேசி பொருட்கள் வாங்கவும்.

சார்மினார் கோபுரத்தின் கூரையின் மேற்கு மூலையில் தான் ஐதராபாத்தின் அழகிய மிகப்பழமையான மசூதி இருக்கிறது. அதை ஒட்டிய விசாலமான பகுதி மன்னரின் அரசவையாக குதுப் ஷாகி ஆட்சிக்காலத்தில் பரிமளித்தது. தொழுகை நடத்த வசதியாக அங்கு 45 தனிஅரங்குகளும் உள்ளன.
கடைத்தெருக்களை விட முக்கியமானது அப்பகுதியில் உள்ள கலைநயம் மிக்க கட்டடங்கள்। மெக்கா மசூதி, ஜமய் மசூதி, மியா மிஷ்க் மசூதி, சார் கமான் என்று கண்கவர் கட்டடங்களின் அணிவகுப்பு உள்ளத்தை அள்ளுகிறது।
மெக்கா மஸ்ஜித்।
இது சார்மினாருக்கு மிக அருகில் இருக்கு। இந்தியாவில் 2வது பெரிய பள்ளிவாசல்। வெள்ளி மற்றும் பெருநாள் தொழுகைகள் மிகவும் விசேசமாக இருக்கும்.
Golconda Fort
This is a 16th century fort of the Shah Kings. Golconda has been the capital of the independent state of telengana for nearly 80 years. Then Hyderabad was made the capital and Sultan Quli Qutb Shah abandoned the fort in 1590 and moved to Hyderabad. The citadel is built on a granite hill 120m high and surrounded by crenellated ramparts constructed from large masonry blocks. Outside the citadel stands another crenellated rampart, with a perimeter of 11km, and yet another wall beyond this. The massive gates were studded with iron spikes to obstruct was elephants.
imax
இது பொழுதுபோக்கு இடம், குழந்தகளுக்கு விளையாட கம்புயட்டர் கேம்ஸ் மற்றும் நிரைய இண்டோர் கேம்ஸ் இருக்கு, பெரியவர்கள் திரிலிங்காக பார்க்க பேய் பங்களா, பூகம்ப ஹோட்டல் 3டி ஷோ இருக்கு. இங்கு மிக பெரிய ஸ்கிரின் உள்ள திறைஅரங்கம் இங்குள்ளது
NTR கார்டன் இது பொழுதுபோக்கு கார்டன்। மிகவும் அழகாக வடிவம் அமைத்து கட்டிய கார்டன்। இதில் ஜப்பான் கார்டன், போன்சாய் மரங்கள், மற்றும் வித விதமான பூக்கள், மற்றும் செயற்க்கையாகவே உருவாக்கிய பெரிய ஆலமரம் என்று அசத்தலான ஓர் கார்டன்
birila mandir
இது முழுவதும் வெள்ளை மார்பாலால் கட்டபட்ட கோவில்.
இந்த கோவிலை எங்கயோ பார்த்தது போல் இருக்கா? ஆம்மாங்க அதேன் தான் வீரா படத்தில் ரஜினி மீனாக்கு கல்யாணம் நடக்குமே... அப்ப கோவிந்த..கோவிந்தா என்று சொல்லி கொண்டு செந்திலோடு சுற்றுவாங்களே அதே இடம் தான்
hussain sagar lake செயற்க்கை ஏரியின் நடுவே ஒரே மார்பிளில் செய்த புத்தர் சிலை
lumbini park :இது பொழுதுபோக்கான பார்க், இங்கிருந்து புத்தர்சிலைக்கு போக போட்டிங் வசதி உள்ளது. இங்கு ஃப்ரல் க்ளாக் மிகவும் பிரபலமானது இங்கு லேசர் ஷோ மிகவும் அருமையாக இருக்கும்.
சில்பாராம் இது ஹைடெக் சிட்டியில் இருக்கும் அழகாக உருவாக்கிய சின்ன கிராமம்। இதில் நிறைய செயற்க்கை கிரமிய மனிதர்களின் உருவங்கள் இருக்கும்।
கைவினை பொருட்கள் கடைகள் நிறைய இருக்கு। லிவ்விங் ராக் இருக்கு।
பார்க் இருக்கு। பொழுதுபோக்கு கலை நிகழ்ச்சிகளும் அடிக்கடி நடக்கும்.
shilparamamமின் முகப்பு பகுதி இது॥
romoji film city
இது மிக பெரிய பிளிம் சிட்டி 1500ஏக்கர் நிலபரப்பில் உருவானது. பல மொழி திரைபடங்கள் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் முழுவது சுற்றி பார்க்கலாம் அவர்கள் பஸ்ஸிலே சுற்றி காட்டுவார்கள்

இது தவிற 40 கார்டன் இருக்கு,
உலக நாடுகளை இங்கேயே பார்க்கலாம் பிராண்ஸ் நகர வீதி முதல் கிராம்மம் வரை நாம் பர்க்கலாம். இன்னும் நிறைய இருக்கு. நேரில் வந்து அனுபவிக்கனும்
snow world
வெயிலின் கொடுமையினை மறக்க ஓர் அருமையான இடம். 1 மணி நேரத்துக்கு ஒரு நபருக்கு 250ரூபாய் டிக்கெட்.

பனி மலை சருக்கு விளையாட்டுகள் நம்மை ஸ்விஸ்க்கே அழைத்து போகும்
nehru zoological park
இந்தியாவிலே மிக பெரிய zoo வில் இதுவும் ஒன்று. இதற்க்கு உள் செல்ல மிகவும் குறைந்த கட்டணம் வசுலிக்கப்டுகிறது
மிருகங்கள், விளங்குகள், பறவைகளை பார்க்க அங்கயே சவாரி வேன் மூலமாக சுற்றி காட்டுவார்கள். காட்டில் பயணம் செய்வது தனி சுகமே... நம் அருகில் (வேன் அருகில்) சிங்கம், புலி எல்லாம் அருகில் பார்க்கும் போது திகில் கடந்த உணர்வு நமக்கு வரும்.
இதன் அருகில் natural history museum, ancient life museum, aquarium, childrens train ride உள்ளது

இது தான்
Hitec_Citமுதல் கட்டிடம்।
நான் இங்கு வந்து 2வருடத்தில் இவ்வளவு இடம் தான் பார்த்தேன்॥ இன்னும் பார்க்கவேண்டிய இடங்கள் நிறைய இருக்கு। நீங்கள் வரும் பொழுது கட்டாயம் மீதியிடங்களை பாருங்க। இதில் உள்ள போட்டோஸ் எல்லாம் கூகுலில் எடுத்தது॥
பார்க்கவேண்டிய இடங்கள்
Archaeological_Museum
Birla_Mandir
Birla_Planetarium
Chilkur
Chow_Mohalla_Complex
Golconda_Fort
Hitec_City:
Hussainsagar_Lake
Hyderabad_Botanical_Gardens
KBR_National_Park
Legislative_Assembly
Mahavir_Harina_Vanasthali_National_Park
Mecca_Masjid
Mir_Alam_Tank
Nehru_Zoological_Park
Nizam's_Silver_Jubilee_Museum
Ocean_Park
Osmania_University
Osmansagar_Lake:
Public_Gardens
Qutb_Shahi_Tombs
Ramoji_Film_City
Salar_Jung_Museum:
Salar_Jung_Museum:
Secret_Lake_(Durgam_Cheruvu):
Shamirpet
Shilparamam_-_The_Arts_&_Crafts_village
snow world
Treasure_Island
அப்பாடா ஒரு வழியாக நமது இல்ல நண்பர்களுக்கு சுற்றிக் காட்டிவிட்டேன்.. மங்கையர் உலகம் போட்டிக்காக இதனை அனுப்புகிறேன்.. ஊர் சுற்றலாம் வாங்க: நீங்கள் பார்த்து ரசித்த ஊர்களை பற்றிய முழுவிவரங்களை படங்களுடன் சொல்லவும். 